அந்த காலகட்டங்களில் என்னுடைய அம்மா ஓர் கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் வேலை நிமித்தம் காரணமாக எனக்கு ஒரு குறிப்பு (Note) எழுதி வைத்து விட்டு போயிருந்தார். அதில் "உனக்கு நாளைக்கு காலம 10 மணிக்கு Flight.நான் போய் சொல்லிட்டு கெதியா வீட்டுக்கு வாரன். நான் வரக்க ஒருக்கா Bankக்கும் போய்ட்டு காசு மாத்திட்டு வாரன். உனக்கு தேவையான உடுப்பை எடுத்து வை" என்று எழுதி இருந்தது.
நான் விண்ணப்பிக்கும்போது கூட ஏதும் யோசிக்கவில்லை. ஆனால் சிங்கைக்கு வரச் சொன்ன பின்புதான் என் மனதில் ஒரு கலக்கமும், பயமும் ஏற்பட்டது. அந்த Noteய் பார்த்த தங்கச்சிமார் இருவரும் upset ஆகி விட்டனர். எவருமே மதிய உணவு சாப்பிடவில்லை. நானும் எனது சங்கத் தலைவரைப் போல் (அண்ணன் கைப்புள்ள வடிவேலு அவர்கள்) பயமோ, கலக்கமோ இல்லாதது போல் நடித்தவாறு எனது துணிமணிகளை எடுத்து வைக்க தொடங்கினேன். அம்மாவும் லீவு எடுத்துக் கொண்டு வீடு வந்துவிட்டார்.
அவர் என்னிடம், நாம் கால தாமதமாக விண்ணப்பித்ததால் இன்னும் admission கிடைக்கவில்லை என்றும். எனினும் மாமா என்னை அங்கே வரச் சொல்வதாகவும். அங்கே அவருக்கு தெரிந்தவர் மூலம் (அவர் சிங்கப்பூர் பலதுறைதொழில் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.) தெமாசெக் பலதுறைதொழில் கல்லூரியில் முயற்சி பண்ணலாம் எனவும் கூறி இருந்ததாக சொன்னார். அது மட்டுமின்றி அங்கே மாமா வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எடுத்து கூறிக் கொண்டு இருந்தார். ஆனால் என் மனதிலோ பயம் காரணமாக ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. (இப்பொழுது நினைத்தால் சின்னப்புள்ள தனமாக இருக்கு). இரவு தூக்கமே வரவில்லை.
மறுநாள் காலையும் புலர்ந்தது. எனது தங்கச்சிமார் இருவரும் பள்ளி செல்லவில்லை. அப்பாவும் அம்மாவும் என்னை வழி அனுப்புவதற்காக அரை நாள் லீவு எடுத்து இருந்தனர்.எங்களை விமான நிலையம் அழைத்துச் செல்ல வண்டியும் வந்து விட,நான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். போகும் வழியில் அம்மா அழத்தொடங்கி விட்டார்.அதை பார்த்து எனக்கும் கண் கலங்கிவிட்டது.
அப்படி இப்படி என்று என்னை ஒருமாறி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். (சொல்லப்போனால் சிங்கத்தை Pack-Up பண்ணிட்டாங்க lol!! )மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம்.


வணக்கம் கோபன்..தொடர்ந்து சந்திப்போம்
ReplyDeleteதற்பொழுது சிங்கம் சிங்கையிலா ...
ReplyDeleteHi Gopan...
ReplyDeleteNice wrting.. Sorry for type in ENGLISH...
- Kiri